Sunday, September 12, 2010

சக்தி கணபதி (SHAKTI GANAPATI)



மெல்லிய இடையுடன் கூடிய பச்சை நிறமேனியுடைய தேவியை தமது இடது புறம் வைத்து தழுவிய வண்ணம் பாச அங்குசங்களைக் கரங்களில் தரித்து பயத்தை நீக்கும், சக்தி கணபதி, ஸந்தியாகாலம் போன்ற ஸிந்தூர வண்ணத்தைக் கொண்டவர்.

Four-armed and seated with one of His shaktis on His knee, Shakti Ganapati, "the Powerful," of orange-red hue, guards the householder. He holds a garland, noose and goad, and bestows blessings with the abhaya mudra.

வீர கணபதி ( VIRA GANAPATI)



வேதாளம், வேல், பாணம், வில், சக்ராயுதம், கத்தி, கேடயம், சம்மட்டி, கதாயுதம், பாசம், அங்குசம், நாகம், சூலம், குந்தம், கோடரி, கொடி ஆகிய எதிர்ப்பதற்கும் காத்துக்கொள்வதற்கும் ஏதுவான போர்க்கருவிகளைத் தமது பதினாறு கைகளிலும் ஏந்தி, சிவப்பு நிறத்தில் நிற்கும் நிலையில் பார்ப்பவர்களை பயமுறுத்தும் ரூபத்தை உடையவர் இவர்.

Eight-armed, Taruna Ganapati, "the Youthful," holds a noose and goad, modaka, wood apple, rose apple, His broken tusk, a sprig of paddy and a sugar cane stalk. His brilliant red color reflects the blossoming of youth.

பக்தி கணபதி (BHAKTI GANAPATI)



தேங்காய், மாம்பழம், மற்றும் வெல்லத்தினாலான பாயசம் நிறைந்த குடம், இவற்றை நான்கு கைகளிலுமாக ஏந்தி இலையுதிர் காலத்தில் தோன்றும் பூரண நிலவைப் போன்று வெண்ணிற மேனியுடன் இவர் அழகாக காட்சித் தருகிறார்.

Shining like the full moon during harvest season and garlanded with flowers, Bhakti Ganapati, dear to devotees, is indeed pleasant to look upon. He holds a banana, a mango, coconut and a bowl of sweet payasa pudding.

தருண கணபதி (TARUNA GANAPATI)



இவர் பாசம், ஆங்குசம், அப்பம், விளாம்பழம், நவாற்பழம், தமது ஒற்றை தந்தம், நெற்கதிர், கரும்பு, ஆகியவற்றை தமது எட்டுகைகளிலும் ஏந்தி இளம் சூரியனின் செந்நிறப் பேரொளியுடன் விளங்குகிறார்.

Eight-armed, Taruna Ganapati, "the Youthful," holds a noose and goad, modaka, wood apple, rose apple, His broken tusk, a sprig of paddy and a sugar cane stalk. His brilliant red color reflects the blossoming of youth.

பால கணபதி (BALA GANAPATI)



வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், கரும்பு, ஆகியவற்றைத் தமது நான்கு கரங்களில் ஏந்தி துதிக்கையில் மோதகத்தை வைத்துக் கொண்டு, பாலசூரியனுக்கு நிகரான சிவப்பு மேனியுடன் எங்கும் ஒளியுடன் விழங்கும் ரூபத்தை கொண்டவர்.


Bala Ganapati is "the Childlike" God of golden hue. In His hands He holds a banana, mango, sugar cane and jackfruit, all representing the earth's abundance and fertility. His trunk garners His favorite sweet, the modaka.

விநாயகரின் 32 வடிவங்கள்

விநாயகரைப் பல்வேறு இடங்களில் சுமார் 32 வடிவங்களில் பல பெயர்களால் அழைத்து வணங்கி வருகிறார்கள். அவை,

1. யோக விநாயகர்
2. பால விநாயகர்
3. பக்தி விநாயகர்
4. சக்தி விநாயகர்
5. சித்தி விநாயகர்
6. வீர விநாயகர்
7. விக்ன விநாயகர்
8. வெற்றி விநாயகர்
9. வர விநாயகர்
10. உச்சிஷ்ட விநாயகர்
11. உத்தண்ட விநாயகர்
12. ஊர்த்துவ விநாயகர்
13. ஏரம்ப விநாயகர்
14. ஏகாட்சர விநாயகர்
15. ஏக தந்த விநாயகர்
16. துவி முக விநாயகர்
17. மும்முக விநாயகர்
18. துவிஜ விநாயகர்
19. துர்கா விநாயகர்
20. துண்டி விநாயகர்
21. தருண விநாயகர்
22. இரணமோசன விநாயகர்
23. லட்சுமி விநாயகர்
24. சிங்க விநாயகர்
25. சங்கடஹுர விநாயகர்
26. சுப்ர விநாயகர்
27. சுப்ர பிரசாத விநாயகர்
28. ஹுரித்திரா விநாயகர்
29. திரியாட் சர விநாயகர்
30. சிருஷ்டி விநாயகர்
31. நிருத்த விநாயகர்
32. மகா விநாயகர்

தொடரும் இடுக்கைகளில் விநாயகரின் 32 வடிவங்கள் பற்றிய விளக்கங்கள்....