Thursday, September 23, 2010

உச்சிஸ்ட கணபதி (Ucchhishta Ganapati)



இடது கையில் வீணையும், வலது கையில் ருத்ராட்சமும், மற்றும் குவளை மலர், மாதுளம்பழம், நெற்கதிர், பாசம் ஆகியவற்றை ஏந்திய ஆறு கைகளை உடையவராய் நீல (கரும்பச்சை) வண்ண மேனியுடன் விளங்கும் இவருக்கு, நின்று கொண்டிருக்கும் நிலையில் உத்திஷ்ட கணபதி என்ற பெயரும் உண்டு.

Ucchhishta Ganapati is "Lord of Blessed Offerings" and guardian of culture. Of blue complexion and six-armed, He sits with His Shakti, holding a vina, pomegranate, blue lotus flower, japa mala and a sprig of fresh paddy

ஸித்தி கணபதி (Siddhi Ganapati)




நன்றாக பழுத்த மாம்பழம், பூங்கொத்துக்கள், கரும்புத்துண்டு, எள்ளாலான மோதகம், மற்றும் பாசம், அங்குசம் இவற்றைக் கைகளில் ஏந்தி (சில சமயம் ஸ்ரீஸம்ருத்தி என்ற தேவியுடனும்) வீற்றிருக்கும் வினாயகர் இவர். பசும்பொன் நிறமேனியுடன் இருப்பதால் இவருக்கு பிங்கள கணபதி என்ற பெயரும் வந்தது.

Golden-Yellow Siddhi Ganapati, "the Accomplished," is the epitome of achievement and self-mastery. He sits comfortably holding a bouquet of flowers, an axe, mango, sugar cane and, in His trunk, a tasty sesame sweet.

(

த்விஜ கணபதி (DVIJA GANAPATI)




நான்கு யானைமுகங்களுடன், இடது கையில் புத்தகமும், வலது கையில் ருத்ராட்சமாலையும், மற்றும் இருகைகளிலும் கமண்டலமும் தண்டமும் ஏந்தி வெண்ணிற மேனியில் சோபையுடன் விளங்கும் ரூபத்தை உடையவர்.


Four-headed Dvija Ganapati, "the Twice-born," is moon-like in color. Holding a noose, a goad, an ola leaf scripture, a staff, water vessel and a his japa beads, He reminds one and all of the urgency for disciplined striving.